—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

துப்பாக்கிச்சூட்டில் கடற்படைச் சிப்பாய் ப**லி

துப்பாக்கிச்சூட்டில் கடற்படைச் சிப்பாய் ப**லி

திருகோணமலை – கப்பல்துறைப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு ஓட்டோ ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர், திருகோணமலைப் பகுதியைச் சேர்ந்த கடற்படைச் சிப்பாய் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கப்பல்துறைப் பகுதியில் நேற்று இரவு 9.15 மணியளவில் பயணித்துக்கொண்டிருந்த ஓட்டோ ஒன்றை இலக்குவைத்து, ரி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் திருகோணமலை, ஆண்டான்குளம் – பேதிஸ்புர பகுதியைச் சேர்ந்த ரத்ன விபுசன குலதுங்க ஆராய்ச்சிலாகே கயான் மனுசங்க (வயது 39) என்ற குடும்பஸ்தரான கடற்படைச் சிப்பாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அத்துடன், ஓட்டோவில் பயணித்த 28 மற்றும் 38 வயதுடைய இருவர் பலத்த காயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால், மேலதிக சிகிச்சைக்காக அவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், போதைப்பொருள் விவகாரம் தொடர்பான தகராறே இந்தத் துப்பாக்கிச்சூட்டுக்குப் பிரதான காரணம் எனக் கண்டறிந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.