—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தெதுறு ஓயாவில் வெள்ள அபாயம்

தெதுறு ஓயாவில் வெள்ள அபாயம்

தெதுறு ஓயா ஆற்றுப்படுகையின் மேல் மற்றும் மத்திய பகுதிகளில் பெய்து வரும் கணிசமான மழைவீழ்ச்சியினால், தெதுறு ஓயாவின் நீர்மட்டம் வெள்ள மட்டத்தை நெருங்கியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், தற்போது செக்கனுக்கு 16,500 கனஅடி என்ற வேகத்தில் ஆற்றுக்கு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

நீர்த்தேக்கத்திற்குத் தொடர்ந்து கிடைக்கும் நீர்வரத்தைப் பொறுத்து, இந்த நீர் வெளியேற்றத்தின் அளவு வரும் மணித்தியாலங்களில் மேலும் அதிகரிக்கப்படலாம் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வாரியபொல, நிக்கவரெட்டிய, மஹவ, கொபெய்கனே, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராச்சிக்கட்டுவை மற்றும் ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட ஆற்றுப்பள்ளத்தாக்கின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அந்தப் பகுதிகளிலுள்ள வீதிகளைப் பயன்படுத்தும் வாகன ஓட்டுநர்களும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.