மண்மேடு சரிந்து ஒருவர் பலி

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிதகந்த பகுதியில், கட்டுமானப் பணிகள் இடம்பெற்ற இடத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று புதன்கிழமை (21) கரிதகந்த பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் மீது மண்மேடு சரிந்து விழுந்துள்ளது.
இதில் காயமடைந்த மூவரும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.