—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தேசிய உற்பத்தித்திறன் விருது விழா கிளிநொச்சியில்

தேசிய உற்பத்தித்திறன் விருது விழா கிளிநொச்சியில்

தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழா எதிர்வரும் 27.10.2026 அன்று கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணம் மற்றும் வடமத்திய மாகாணத்தை உள்ளடக்கிய பத்து மாவட்டங்களில் வெற்றி பெற்றவர்களுக்கும், முதல் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிரதம விருந்தினராகவும், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் அனைத்துத் தரப்பினரும் கலந்து சிறப்பிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.