—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் திட்டமா?

தேர்தல் முடிந்ததும் ஈரான் மீது தாக்குதல் நடத்தத் திட்டமா?

அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்த பின்னர், மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும், இருப்பினும் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி மோதலைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முயற்சிப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதேவேளை, ஈரானுக்கு எதிராக அடுத்தகட்ட தாக்குதலை நடத்தத் தயாராகுமாறு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ட்ரம்புக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

நாளை (நவம்பர் 3) அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஈரானுடனான போர் நடவடிக்கைகள் தொடர்பாக நெதன்யாகு, ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாடியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது, அமெரிக்கத் தேர்தல் நிறைவடைந்த பின்னர் ஈரான் மீது தாக்குதலை ஆரம்பிக்குமாறு ட்ரம்பிடம் நெதன்யாகு வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

எனினும், ஈரானுடனான தாக்குதல் தொடர்பில் நெதன்யாகு ஆலோசனைகளை வழங்கியுள்ள போதிலும், ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி மோதலைச் சுமூகமாகத் தீர்ப்பதற்கு ட்ரம்ப் முயற்சிப்பதாக சர்வதேச மட்டத்தில் கருத்துகள் நிலவி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக வெளியாகும் சர்வதேச ஊடகச் செய்திகளும் இத்தகைய கருத்துகளைச் சுட்டிக்காட்டுகின்றன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.