—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

தோட்டத் தொழிலாளர்கள் 22 பேர் வைத்தியசாலையில்!

தோட்டத் தொழிலாளர்கள் 22 பேர் வைத்தியசாலையில்!

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டுக்கலை மற்றும் தியணீலக்கலை தோட்டங்களில் இன்று (24) முற்பகல் 11.30 மணியளவில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 22 பேர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த 15 பெண் தொழிலாளர்கள் மற்றும் ஒரு ஆண் தொழிலாளர் உள்ளிட்ட 16 பேரும், தியணீலக்கலை தோட்டத்தைச் சேர்ந்த ஆறு ஆண் தொழிலாளர்களும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒன்பது பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏனையவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.