—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

7.2 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை ரத்து!

7.2 ரிக்டர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை ரத்து!

தென் பசிபிக் நாடான வனுவாட்டு தீவுகளுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் இன்று சனிக்கிழமை (24) ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதையடுத்து, வனுவாட்டு தீவு அதிகாரிகள் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினர்.

இந்நிலையில், சுனாமி அச்சுறுத்தல் நீங்கியதைத் தொடர்ந்து, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்களோ அல்லது உ**யிரிழப்புகளோ ஏற்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.