—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நச்சு வாயுவால் மூச்சுத்திணறி தம்பதி ப**லி

நுவரெலியா, மீப்பிலிமனாவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர், மூடிய அறைக்குள் பார்பிக்யூ (Barbecue - BBQ) அடுப்பைப் பயன்படுத்தியதால் வெளியான நச்சு வாயுவைச் சுவாசித்து இன்று (03) அதிகாலை உ**யிரிழந்துள்ளதாக நுவரெலியா பிரதேச உதவிப் பொலிஸ் கண்காணிப்பாளர் சந்தன பஸ்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவிசாவளையைச் சேர்ந்த குறித்த தம்பதியினர், நுவரெலியா, மீப்பிலிமனாவில் சுற்றுலா விடுதியொன்றின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அந்த விடுதியின் கட்டுமானப் பணிகள் நிறைவடையும் வரை, அருகிலுள்ள வீடொன்றை வாடகைக்கு எடுத்து தற்காலிகமாகத் தங்கியிருந்துள்ளனர்.

நுவரெலியா பகுதியில் நிலவிய கடும் குளிர் காரணமாக, தம்பதியினர் அறைக்குள் பார்பிக்யூ அடுப்பை எரியவிட்ட நிலையில் உறங்கச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், இன்று (03) அதிகாலை உறவினர்கள் தம்பதியினரின் தொலைபேசிக்கு அழைப்புகளை மேற்கொண்டபோதும், அவர்கள் பதிலளிக்கவில்லை. இதனையடுத்து, அப்பகுதி கிராம உத்தியோகத்தருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

அவர் வீட்டிற்குச் சென்று பார்வையிட்டபோது, இருவரும் உ**யிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர் நானுஓயா பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கியுள்ளார்.

உ**யிரிழந்த தம்பதியினரில் கணவர் கப்பல் ஒன்றின் கப்டன் எனவும், அவருக்கு 52 வயது எனவும், அவரது மனைவிக்கு 46 வயது எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நானுஓயா பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பார்பிக்யூ செய்து உணவருந்திய பின்னர், அடுப்பை அணைக்காமல் உறங்கச் சென்றதால் இந்த விபரீதம் நேர்ந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, நுவரெலியா போன்ற குளிரான பிரதேசங்களுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பார்பிக்யூ சமைத்த பின்னர் அல்லது குளிர்காய்வதற்காக அந்த அடுப்பை மூடிய அறைக்குள் வைத்துவிட்டு உறங்கும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் எனப் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பார்பிக்யூ அடுப்பில் உள்ள கரி அல்லது நிலக்கரி முழுமையாக எரியாதபோது, நிறமற்றதும் மணமற்றதுமான ஆபத்தான கார்பன் மோனாக்சைடு வாயு வெளியேறுகிறது.

இந்த வாயு மூடிய அறைக்குள் பரவும்போது, அதைச் சுவாசிப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படுவதை உணர முடியாமல் மயக்கம் ஏற்பட்டு உ**யிரிழப்பு நேரிடலாம் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.