நாடாளுமன்ற நுழைவாயிலில் மக்கள் போராட்டம்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவற்றை அரசாங்கம் உடனடியாக மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தி, இன்று புதன்கிழமை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற நுழைவாயில் சந்தியில் நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் போராட்ட முன்னணி அறிவித்துள்ளது.
எந்தவிதமான திருத்தங்களும் இன்றி, குறித்த இரண்டு சட்டமூலங்களும் முழுமையாக மீளப்பெறப்பட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த முதலிகே, கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தால் கொண்டுவரப்படவுள்ள இந்தச் சட்டமூலங்கள் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதுடன், அடக்குமுறைகளை ஏவிவிடும் வகையில் அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், அனைத்துத் தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் எனவும் வசந்த முதலிகே அழைப்பு விடுத்துள்ளார்.

Comments 0
Be the first to comment.