நாமலைச் சிறையில் வைத்தாலும் கட்சி முடங்காதாம்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள போதிலும், சிறையிலிருந்தவாறே கட்சிக்குத் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருவதால் கட்சி ஒருபோதும் வீழ்ச்சியடையாது என முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
மொட்டுக் கட்சியின் தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வீழ்ச்சியடைந்துவிட்டது, தனது அமைப்புச் சக்தியை இழந்துவிட்டது எனச் சில கட்சிகளும் நபர்களும் நினைக்கலாம்.
நாமல் ராஜபக்ஷ சிறையில் இருந்தாலும், கட்சியின் செயலாளர் உட்பட அனைவருக்கும் தேவையான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கி வருகின்றார்.
அடுத்த வாரம் முதல் தொகுதி மட்டத்தில் நடைபெறவுள்ள கூட்டங்களில் நாமல் ராஜபக்ஷ பங்கேற்காவிட்டாலும், எமது கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள். எனவே, நாமலைச் சிறையில் அடைத்தால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும் என எவரும் நினைக்கக்கூடாது” என்றார்.

Comments 0
Be the first to comment.