—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு

ஏர்பஸ் விமானக் கொள்வனவு தொடர்பான சர்ச்சைக்குரிய கொடுக்கல் வாங்கல் வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்காக நாமல் ராஜபக்ஷ இன்று நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம, கடந்த ஒக்டோபர் 27ஆம் திகதி பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படியே, அவர் இன்று மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கான ஏர்பஸ் விமானக் கொள்வனவு மற்றும் அது சார்ந்த கொடுக்கல் வாங்கல்களின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோதப் பணமோசடி மற்றும் 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழேயே நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்குத் தொடரப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.