—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

65 குடும்பங்களுக்குக் காணி உரிமை வழங்கல்

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் பல வருடங்களாகத் தமது காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் இன்றி வாழ்ந்து வந்த 65 குடும்பங்களுக்கு இன்று புதன்கிழமை (28) காணி உரித்துப் பத்திரங்கள் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

‘வளமான நாடு, அழகான வாழ்க்கை’ எனும் தொனிப்பொருளில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, மன்னார் மாவட்டத்தில் பல வருடங்களாகத் தமது காணிகளுக்கான ஆவணங்கள் இன்றி வாழ்ந்து வந்த மன்னார் பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த 65 குடும்பங்களுக்குக் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.

பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், ஜெகதீஸ்வரன் ஆகியோர் இணைந்து காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்தனர்.

மேலும், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார் நகர சபையின் தவிசாளர் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் ஆகியோரும் இணைந்து குறித்த இலவச மானியப் பத்திரங்களை மக்களிடம் வழங்கி வைத்தனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.