—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நாமல் ராஜபக்‌ஷவின் செயலாளருக்கு பிணை

நாமல் ராஜபக்‌ஷவின் செயலாளருக்கு பிணை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவின் தனிப்பட்ட செயலாளர் சஞ்சய சமரசிங்கவைப் பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபரைத் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் சமர்ப்பணங்கள் மற்றும் சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸின் வாதங்களைப் பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதம நீதிவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

குற்றச் செயல்களின் மூலம் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சொத்துகளை வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலேயே சஞ்சய சமரசிங்க கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.