—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

23,600 ஆசிரியர் வெற்றிடங்கள்

23,600 ஆசிரியர் வெற்றிடங்கள்

சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலங்களில் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் 23,600 ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பில் கல்வி அமைச்சு விளக்கமளித்துள்ளது.

இது தொடர்பாக இன்று செவ்வாய்க்கிழமை (20) கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.ஜே.எஸ்.எஸ். எதிரிசூரிய விளக்கமளித்துள்ளார்.

ஆசிரியர் சேவைப் பிரமாணக் குறிப்பின்படி, நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு விண்ணப்பதாரர்களான 46,012 பேர் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கான பெயர்ப் பட்டியலில் 17,688 பேரின் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தமை தொடர்பில் எழுந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்த விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரே விண்ணப்பதாரர் பல பாடங்களுக்கும், தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் வெவ்வேறு ஆசிரியர் பதவிகளுக்கும் தகுதி பெற்றிருக்கலாம். எனவே, பெயர்ப் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தகுதியான விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையை மதிப்பிட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பாட இணைப்புகளையும் ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டபோது, ஏறத்தாழ 46,012 பேர் நேர்முகப் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இதேவேளை, 41 பாட இணைப்புகளுக்கு எந்தவொரு விண்ணப்பதாரரும் தகுதி பெறவில்லை. மேலும், 124 பாட இணைப்புகளுக்குப் போதிய தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லாததால், சில ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.