—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நிதி முறைகேடு: முன்னாள் பணிப்பாளர் கைது

நிதி முறைகேடு: முன்னாள் பணிப்பாளர் கைது

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் லலித் பியூம் பெரேரா, இலஞ்ச, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடிகள் மற்றும் நிதி ஒழுங்கீனங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அவர் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆணைக்குழுவின் அதிகாரிகள் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரை உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலஞ்ச, ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு முன்னெடுத்து வருகின்றது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.