—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நிதி மோசடியில் ஊழியர் கைது

நிதி மோசடியில் ஊழியர் கைது

தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றிய ஊழியரொருவர், நிறுவனத்தின் கணினித் தரவு அமைப்பில் போலித் தகவல்களை உள்ளீடு செய்து, 59.65 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையைத் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி மோசடி செய்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நம்பிக்கைத் துரோகம், நிதி மோசடி மற்றும் குற்றவியல் ரீதியான நிதி கையாடல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் 4ஆம் இலக்க நிதி விசாரணைப் பிரிவு இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

இதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுநாயக்கப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினரால் நேற்று வெள்ளிக்கிழமை (30) சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மாளிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.

இச்சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.