ஹெரோயினுடன் சிக்கிய 27 வயது இளைஞர்!

அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலபிட்டிய, ஹீனட்டிய பிரதேசத்தில் 102 கிராம் 630 மில்லிகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (30) கைது செய்யப்பட்டு, அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பலபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.