—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்

நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்

அஹங்கம, கதலுவ பாலத்திற்கு அருகில் இன்று (26) பேருந்து ஒன்றும் டிப்பர் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஐவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்தும், மாத்தறையிலிருந்து காலி நோக்கிச் சென்ற டிப்பர் லொறியும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, பேருந்தில் பயணித்த நான்கு பயணிகளும் டிப்பர் லொறியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டிப்பர் லொறி மற்றொரு வாகனத்தை முந்திச் செல்ல முயன்றபோது, எதிரே வந்த பேருந்துடன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அஹங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.