—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

பாலம் சேதமடைந்து மக்கள் அவதி

பாலம் சேதமடைந்து மக்கள் அவதி

நுவரெலியா மாவட்டம், அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட உருலேக்கர் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள பாலத்தை உடனடியாகச் செப்பனிட்டுத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஏற்பட்ட தித்வா புயல் மற்றும் இயற்கைச் சீற்றம் காரணமாக இந்தப் பாலம் உடைந்துள்ளதுடன், தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.

இதனால், மழைக்காலங்களில் பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் நோயாளர்கள் ஆற்றைக் கடந்து பிரதான வைத்தியசாலைக்கோ அல்லது பாடசாலைக்கோ செல்ல முடியாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே, ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு இந்தப் பாலத்தை விரைவாகச் சீரமைத்துத் தர வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.