வயலில் தவறி விழுந்து விவசாயி உ**யிரிழப்பு

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வயலில் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர், எதிர்பாராதவிதமாக நீரில் தவறி விழுந்து உ**யிரிழந்துள்ளார்.
வழமைபோல் தனது வயல் நிலத்தில் விவசாயப் பணிகளை மேற்கொண்டு வந்தபோதே இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
குறித்த நபர் வயலில் வேலை செய்துகொண்டிருந்தபோது, திடீரெனக் கால் வழுக்கி அருகிலிருந்த நீர் தேங்கிய பகுதியில் தவறி விழுந்துள்ளார்.
நீண்ட நேரமாக அவர் கரைக்கு வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோதே, அவர் நீரில் மூழ்கி உ**யிரிழந்தமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, உ**யிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனை மற்றும் மேலதிக மரண விசாரணை நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் மரணம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.