—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதல்

நோட்டன் – கார்பெக்ஸ் வீதியில் நேற்று (28.10.2026) மாலை 5.40 மணியளவில் மோட்டார் சைக்கிளும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

ஒஸ்போன் பகுதியில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்துள்ளது.

எனினும், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபர் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக நோட்டன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.