—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

350 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

350 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 18ஆம் மைல்கல் பகுதியில், சட்டவிரோத மதுபானத்தைக் காரில் ஏற்றிச் சென்ற சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (30) கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தங்கொட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரெனத் தெரியவந்துள்ளது.

கட்டுநாயக்க பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது, 262 லீற்றர் 500 மில்லிலீற்றர் (350 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காருடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாகக் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.