விபத்தில் இளைஞர் உ**யிரிழப்பு
குருநாகல் – ஹிரிபிட்டிய வீதியில் மாலகமுவ பகுதிக்கு அருகில் மோட்டார் சைக்கிளும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற வீதி விபத்தில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் ஒருவர் உ**யிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
எதிர்பாராத விதமாக இடம்பெற்ற இந்த விபத்தில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இளைஞர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உ**யிரிழந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளையும், பேருந்தின் சாரதிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளையும் குருநாகல் தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.