மன்னாரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
மன்னார் மாவட்டத்தின் சாந்திபுரம் மற்றும் பனங்கட்டிக்கொட்டு பகுதிகளில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாகப் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகளை நேரில் ஆராயும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்டோர் நேற்று (26) மாலை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டனர்.
இதன்போது, சேதமடைந்த வீடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
பகுதியளவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தற்காலிகமாகத் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டதுடன், முழுமையாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
குறித்த விஜயத்தின்போது, தேசிய மக்கள் சக்தியின் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் பிரஜாசக்தி உறுப்பினர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், மக்களின் தேவைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினர்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உணவு உள்ளிட்ட உடனடி நிவாரண உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Comments 0
Be the first to comment.