—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

ஹட்டன் பேருந்து நிலையத்தில் மண்சரிவு!

ஹட்டன் பேருந்து நிலையத்தில் மண்சரிவு!

ஹட்டன் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், அரச மற்றும் தனியார் பேருந்து தரிப்பிடப் பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று (26) பெய்த கனமழையால், ஹட்டன் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்து மீது மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

நேற்று (26) பிற்பகல் 3.30 மணியளவில், பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள பாரிய மலைத்திட்டு பகுதியில் இருந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்துச் சேவைக்காகப் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளுக்குச் சேதம் ஏற்பட்டதாக ஹட்டன் பேருந்து நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மண்சரிவு காரணமாக, சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஏனைய பேருந்துகளை அங்கிருந்து அகற்றுமாறு தனியார் பேருந்து நிலைய நடத்துநர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் பெய்து வரும் கனமழையால், பேருந்து தரிப்பிடப் பகுதியில் தொடர்ந்து பேருந்துகளை நிறுத்தி வைப்பது ஆபத்தானதாகும். எனவே, தனியார் மற்றும் அரச பேருந்துகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும். இல்லையெனில், பேருந்து சாரதிகள், நடத்துநர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.