—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மன்னாரில் 122 பேர் இடம்பெயர்வு

சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் மாவட்டத்தில் இதுவரை 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிக முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நடராஜா சூரிய ராஜா தெரிவித்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கூறாய் கிராமத்தைச் சேர்ந்த 29 குடும்பங்களும், சீது விநாயகர் குளம் கிராமத்தைச் சேர்ந்த 21 குடும்பங்களும் அடங்கலாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இலுப்பைக்கடவை பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த இரு கிராமங்களுக்குச் செல்லும் பாதைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன், இரு கிராமங்களிலும் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சாந்திபுரம் கிராமத்தில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தினால் நான்கு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மற்றும் இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குவதற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் நடராஜா சூரிய ராஜா தெரிவித்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.