—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

மன்னார் மாணவர்களின் சாதனைகளுக்கு கௌரவிப்பு

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை மாணவர்கள் பல்வேறு துறைகளில் ஈட்டிய சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்வு நேற்று (நவம்பர் 3ஆம் திகதி) நடைபெற்றுள்ளது.

பாடசாலை அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் மற்றும் மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, சர்வதேச மற்றும் தேசிய மட்டங்களில் வெற்றிபெற்ற மாணவர்களைக் கௌரவித்தனர்.

சர்வதேச கணிதப் போட்டிகள், தேசிய மட்ட தடகளப் போட்டிகள், அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்டப் போட்டிகள் மற்றும் சர்வதேச கராத்தேப் போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பதக்கங்களையும் அங்கீகாரங்களையும் பெற்று, மன்னார் மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்த மாணவர்களை அரசாங்க அதிபர் பாராட்டி, நினைவுச் சின்னங்களையும் பரிசில்களையும் வழங்கிக் கௌரவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் பெருமளவில் கலந்துகொண்டு மாணவர்களை ஊக்குவித்தமை குறிப்பிடத்தக்கது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.