மீண்டும் ஆட்சியமைப்போம்; அமைச்சர் உறுதி!

எதிர்க்கட்சிகள் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்தாலும், என்னதான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் மக்களின் மனங்களை அவர்களால் ஒருபோதும் வெல்ல முடியாது என்று அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் நாட்டைப் படுகுழியில் தள்ளி நாசமாக்கிய ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றுவதற்கு மக்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களின் உண்மையான ஆதரவுடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்லும் தற்போதைய அரசாங்கத்தின் பயணத்தை எந்தச் சக்தியாலும் தடை செய்ய முடியாது என்றும் அமைச்சர் அநுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.

Comments 0
Be the first to comment.