மூன்று மாவட்டங்களுக்கு ஆபத்து எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நிலச்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (22) இரவு 10 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை நிலச்சரிவு முன்னெச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தின் உடபாலத்த, மெததும்பற, குண்டசாலை ஆகிய பகுதிகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதிக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலப்பத்த மற்றும் குருவிட்ட ஆகிய பகுதிகளுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களும் வாகன ஓட்டிகளும் நிலச்சரிவு, பாறைச்சரிவு உள்ளிட்ட அபாயங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும், அவசர நிலை ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லத் தயாராக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Comments 0
Be the first to comment.