யானை உ**யிரிழப்பு குறித்து விசாரணை
அம்பாறை மாவட்டம், பொத்துவில் – ஊறணி பாலத்திற்கு அருகில் காட்டு யானை ஒன்று உ**யிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தகவலறிந்த லகுகல வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று யானையின் உ**யிரிழப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த யானை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நேரடி மின்சாரக் கம்பியின் தாக்குதலுக்கு இலக்காகி உ**யிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், முதற்கட்ட விசாரணைகளும் மேலதிக பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக மனித–யானை மோதல்களும் யானைகளின் உ**யிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், பொத்துவில் பகுதியில் மீண்டும் ஒரு யானை உ**யிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments 0
Be the first to comment.