ரணில் – சஜித் கூட்டணி குறித்துப் பிமல் கருத்து
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் ஒன்றிணைந்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ அசைக்கவோ முடியாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் சாத்தியமான அரசியல் கூட்டணிகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் நாட்டைச் சீரழித்த பழைய அரசியல் கலாசாரத்தை நிராகரித்தே மக்கள் தற்போதைய அரசாங்கத்துக்குத் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர்.
மக்களின் இந்த ஆதரவை நேரடியாக எதிர்கொள்ள முடியாத அச்சத்தினாலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவும் மீண்டும் இணைவது குறித்துப் பேசி வருகின்றனர்.
பழைய தலைவர்களும் நிராகரிக்கப்பட்ட அரசியல் சக்திகளும் மீண்டும் ஒன்றிணைந்தாலும், மக்களுக்காகச் செயற்படும் தமது அரசாங்கத்தைக் ஒருபோதும் கவிழ்க்கவோ அல்லது அசைக்கவோ முடியாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Comments 0
Be the first to comment.