ரயில் மோதி இருவர் பலி

குருநாகல் – வெல்லவ பகுதியில் ரயில் கடவையைக் கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹதிரவலான பகுதியில் நேற்று திங்கட்கிழமை (19) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் நோக்கிப் பயணித்த ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்து தொடர்பில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், சடலங்களை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் வெல்லவ பகுதியைச் சேர்ந்த 18 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பில் வெல்லவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.