வருமானத்தை உயர்த்த புதிய திட்டம்
தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை உயர்த்துவதற்குப் புதிய உத்திகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையின் (ஜனவசம) முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
அவர் அண்மையில் ஹங்குராங்கத்தை ஹோப் தோட்டத் தொழிலாளர்களை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மூன்று மணித்தியாலங்களுக்குள் 23 கிலோ தேயிலைக் கொழுந்தைப் பறிக்க முடியும் என்றும், தொழிலாளர்களை மிக இலகுவாக 40 கிலோ வரை பறிக்கச் செய்து அவர்களின் வருமானத்தை உயர்த்த முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தேயிலைச் செடிகளுக்கு உரமிட்டு முறையாகப் பராமரித்தால் நல்ல கொழுந்தை அறுவடை செய்ய முடியும் எனக் குறிப்பிட்ட முகாமையாளர், தோட்டத்திற்குப் புதிய வாகனமொன்றைக் கொள்வனவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்கள் அதிகளவில் கொழுந்து பறித்தால், நாட்சம்பளத்திற்கான கிலோ அளவைத் தவிர்த்து, மேலதிகமாகப் பறிக்கும் ஒவ்வொரு கிலோவுக்கும் பணம் உழைக்க முடியும் என்றும், அது கடினமான காரியமல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எதற்கும் பயப்பட வேண்டாம், எல்லாம் இலகுவாக நடைபெறும் எனவும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டியுள்ளார்.
அதேநேரம், 18 கிலோ கொழுந்து பறித்தால், 11 கிலோவுக்கு அரைப் பேர் போடப்படும் என்றும், மிகுதியான கிலோவுக்கு வேறாகப் பணம் வழங்கப்படும் என்றும் நிர்வாகத்தின் நடவடிக்கை தொடர்பான தகவலையும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
“இதையெல்லாம் தட்டிக்கேட்க யார் இருக்கிறார்?” எனத் தொழிலாளர்கள் கிசுகிசுத்தது மலைக்குருவியின் காதில் விழுந்தது.

Comments 0
Be the first to comment.