—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

வான்வழித்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 14 பேர் ப**லி

வான்வழித்தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 14 பேர் ப**லி

ஏமனில் ஹவுதிக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சவுதி அரேபியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 14 பேர் உ**யிரிழந்துள்ளனர்.

ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதிக் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அல்-ஜவ்ஃப் (Jawf) மாகாணத்தில் அமைந்துள்ள சந்தை மற்றும் பெற்றோல் நிலையம் மீது சவுதி படைகள் ட்ரோன் மூலம் வான்வழித் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 14 பேர் உ**யிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்ததாகவும் ஹவுதிகளின் செய்தி ஊடகமான அல்மசிரா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் முன்னதாக சவுதி அரேபியா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்ற ஏமன் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏடன் நகர விமான நிலையம் அருகே ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

அந்த ஏவுகணை விமான நிலையத்தின் விமானங்கள் புறப்படும் பகுதியில் விழுந்துள்ளது. எனினும், முன்னெச்சரிக்கையாக அங்கிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உ**யிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

மேலும், ஒரு சரக்கு விமானமும் தாக்குதலில் சிக்காமல் புறப்பட்டுத் தப்பியதாக அரசின் கீழ் இயங்கும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்தச் சரக்கு விமானத்தில் தாக்குதலுக்கான ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்பட்டதால் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்குதலுக்கு முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் ஹவுதி இராணுவப் பேச்சாளர் யாஹ்யா சாரி தனது டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சனாவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, ஏடன் நகரம் ஏமன் அரசின் தற்காலிகத் தலைநகரமாகச் செயற்பட்டு வருகிறது. இதனால், அண்மைக் காலமாக அந்நகரின் மீது ஹவுதிக் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

ஏமன் அரசுக்கு ஆதரவளிக்கும் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதும் ஹவுதிக் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.