—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

வெலிஓயாவில் வடிகானில் வீழ்ந்த கெப் வாகனம்

வெலிஓயாவில் வடிகானில் வீழ்ந்த கெப் வாகனம்

ஹட்டன், வெலிஓயா தோட்டத்தின் ஸ்டோக்ஸ் (Stokes) பகுதியில் இன்று காலை 7.45 மணியளவில் பொலிரோ ரக கெப் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி வடிகானில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

மின்சாரப் பிரபாக்கி ஒன்றை ஏற்றிச் சென்ற குறித்த கெப் வாகனம் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நாய் ஒன்று வீதியின் குறுக்கே பாய்ந்துள்ளது.

இதன்போது நாயைக் காப்பாற்ற முற்பட்ட சாரதியால் வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், வாகனம் வீதியை விட்டு விலகி வடிகானில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.