ஹாட்லிக் கல்லூரி மாணவன் சாதனை!

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டிகளில், தட்டெறிதல் பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் வினோதன் விகாஷ் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் தியகம மைதானத்தில் நடத்தப்பட்டு வரும் இப்போட்டிகளிலேயே மாணவன் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் பிரிவில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற வினோதன் விகாஷ், தனது திறமையை வெளிப்படுத்தி தட்டினை 43.58 மீற்றர் தூரம் எறிந்தார்.
இதன் மூலம் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.
மாணவனின் இந்தச் சாதனைக்குப் பயிற்றுவிப்பாளர் வ. ஹரிகரன் முறையான பயிற்சிகளை வழங்கி வழிநடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments 0
Be the first to comment.