100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி; மூவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
கதிர்காமத்திலிருந்து தலவாக்கலை நோக்கிப் பயணித்த படி லொறியொன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று (03.11.2026) முற்பகல் 10 மணியளவில் நுவரெலியா - ஹட்டன் வீதியில், நானுஓயா சுற்றுவட்ட வீதியின் கிரிமெட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வியாபாரத்திற்காக ஆடைகளை ஏற்றிக்கொண்டு பயணித்த படி லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறி வீதியை விட்டு விலகிப் பள்ளத்தில் விழுவதற்கு முன்னர், அதில் பயணித்த மூவரும் உடனடியாக வெளியே குதித்துள்ளனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
இதனையடுத்து, படி லொறி சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பலத்த சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் நானுஓயா போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.