—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அகில இலங்கைப் போட்டியில் வடக்கு மாணவர்கள் சாதனை!

அகில இலங்கைப் போட்டியில் வடக்கு மாணவர்கள் சாதனை!

அகில இலங்கை கணிதப் போட்டியில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற மாணவர் அணி, இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

அகில இலங்கை கணிதப் போட்டி – 2026 இன் சிரேஷ்ட பிரிவு 2 (தரம் 12, 13) க்கான போட்டி கடந்த வியாழக்கிழமை (2026 ஒக்டோபர் 22ஆம் திகதி) நடைபெற்றது.

இதில் வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற அணியே இரண்டாம் இடத்தைப் பெற்றது.

வடக்கு மாகாண அணியில் பின்வரும் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றிருந்தனர்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி: எஸ். அட்சயன், ஆர். பிரவீன், வை. திவனுஜன், ரி. சுவர்மன், எஸ். பிரவீனன்.

சாவகச்சேரி இந்துக் கல்லூரி: ஜி. ஷாந்தித்யன்.

கொக்குவில் இந்துக் கல்லூரி: ஆர். விதுர்சன்.

ஹாட்லிக் கல்லூரி: கே. கஜலக்சன்.

தேசிய மட்டத்தில் வடக்கு மாகாணத்துக்குப் பெருமை தேடித்தந்த இந்த மாணவர்களுக்குப் பலரும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.