அமெரிக்கா அவசர அறிவுறுத்தல்

சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவூதி அரேபியா மட்டுமன்றி, ஐக்கிய அரபு இராச்சியம், ஜோர்தான், கட்டார் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இயங்கும் அமெரிக்கத் தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் குடும்பத்தினரையும் உடனடியாக வெளியேறுமாறு வொஷிங்டன் அறிவுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யேமன் ஆதரவு ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், அதிகரித்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அமெரிக்கா இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இப்பிராந்தியத்தில் உள்ள தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Comments 0
Be the first to comment.