சைக்கிளில் சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்

யாழ்ப்பாணம், இணுவில் காங்கேசன்துறை வீதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் முதியவர் ஒருவர் உ**யிரிழந்துள்ளார்.
இணுவில் பகுதியில் கோவில் வாசலுக்கு அருகில் சைக்கிளில் பயணித்த முதியவர் மீது டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உ**யிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உ**யிரிழந்தவர் இணுவில் பகுதியைச் சேர்ந்த கணேசன் பழனிலிங்கம் (65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.