ஜோர்தானில் வழிபாட்டுத் தலத்தில் துப்பாக்கிச் சூடு: 8 பேர் உயி@ரிழப்பு!

ஜோர்தானின் மத்திய பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில் நடைபெற்ற இறுதிச்சடங்கின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜோர்தானின் கரக் பகுதியில் உள்ள வழிபாட்டுத் தலத்தில் இன்று (23) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உந்துருளியில் சென்ற அடையாளம் தெரியாத இருவர், வழிபாட்டுத் தலத்திற்குள் இருந்தவர்களை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், தப்பிச் சென்ற சந்தேகநபர்களைக் கண்டறிவதற்கான விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜோர்தான் அரசாங்கத்தின் பேச்சாளர் மொஹமட் அல்-மோமனி தெரிவித்துள்ளார்.

Comments 0
Be the first to comment.