தாய்வானைத் தாக்கிய சம்பி சூறாவளி – ஒருவர் உயி@ரிழப்பு, 171 பேர் காயம்!

சம்பி சூறாவளி காரணமாக தாய்வானில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 171 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் தீயணைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (23) உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிவரையான நிலவரப்படி இந்தப் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. முன்னதாக, சூறாவளி காரணமாக 94 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் உந்துருளிகளில் இருந்து தவறி விழுந்தமை உள்ளிட்ட போக்குவரத்து விபத்துகளில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தவறி விழுந்ததாலும், சரிந்து விழுந்த அல்லது சாய்ந்த விளம்பரப் பலகைகள் மற்றும் மரங்கள் உள்ளிட்டவற்றில் மோதியதாலும் பலர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஒன்பது பேர் வெளிநாட்டவர்கள் எனச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் ஐவர் வியட்நாமியர்கள், இருவர் இந்தோனேசியர்கள் மற்றும் இருவர் மலேசியர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments 0
Be the first to comment.