பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் நிராகரிப்பு

பிரான்ஸ் உள்நாட்டு அமைச்சர் லொரன்ட் நூனெஸ் பதவி விலக முன்வந்த நிலையில், அவரது இராஜினாமா கோரிக்கையை ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் நிராகரித்துள்ளார்.
பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே கட்டளைச் சங்கிலியைத் தொடர்ந்து பேண வேண்டியதன் அவசியத்தைக் கருத்திற்கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வார இறுதியில் பிரான்ஸில் இடம்பெற்ற பாரிய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, உள்நாட்டு அமைச்சர் லொரன்ட் நூனெஸ் தனது பதவியிலிருந்து விலக முன்வந்துள்ளார்.
சில நகரங்களில் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் சிரமங்களை எதிர்கொண்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சில குறைபாடுகள் காணப்பட்டதாகவும் அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இருப்பினும், அவரது இராஜினாமா கோரிக்கையை ஜனாதிபதி மக்ரோன் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதற்கிடையில், கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் புதிய அணுகுமுறைகளை விரைவாக வகுக்குமாறு உள்நாட்டு அமைச்சர் லொரன்ட் நூனெஸுக்கு ஜனாதிபதி மக்ரோன் உத்தரவிட்டுள்ளார்.

Comments 0
Be the first to comment.