—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

27 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல்

27 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது கண்ணிவெடித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் 27 இந்திய மாலுமிகளுடன் பயணித்த 'எம்.டி. லூயிஸ் 1' (MT LOUISE 1) என்ற பனாமா கொடி தாங்கிய எண்ணெய்த் தாங்கிக் கப்பல் மீது காந்தக் கண்ணிவெடிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற இத்தாக்குதலில், கப்பலின் எஞ்சின் பகுதியில் தீப்பற்றியதால் கப்பல் இயங்க முடியாமல் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளது.

இருப்பினும், கப்பலில் இருந்த 27 இந்திய மாலுமிகள் உட்பட அனைவரும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக உள்ளதாக இந்திய மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கை மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் மிக முக்கிய கடல்சார் பாதையான ஹோர்முஸ் நீரிணையில், கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்கா – ஈரான் மோதல் தொடங்கியதிலிருந்து, வணிகக் கப்பல் ஒன்றின் மீது காந்தக் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்ட முதலாவது சம்பவம் இதுவெனக் கூறப்படுகிறது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.